‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் நாளை (12) முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக மீன்வளத்துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முதல் கட்டமாக ரூ .720 மில்லியனை இலங்கைக்கு கப்பல் நிறுவனம் வழங்கியுள்ள நிலையில், மீனவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க அரசாங்கம் தயாராகி வந்தது.
இந்நிலையில் 16,000 மீனவர்களுக்கு 420 மில்லியன் ரூபா நிவாரணமாக பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இடைக்கால இழப்பீட்டு தொகையாக இது வழங்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இழப்பீட்டு தொகை மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட உள்ளதுடன், காசோலைகளாக விநியோகிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வாரத்திற்குள் இந்த பணம் வரவு வைக்கப்படும்.அவ்வாறு கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்த வாரம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது என்று மாநில இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறினார்.