சீனாவின் தயாரிப்பான “சினோபார்ம்” தடுப்பூசி வைரஸின் “டெல்டா” மாறுபாட்டிற்கு எதிராக சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த வாரத்தின் நடுப்பகுதியில் இது குறித்த ஆய்வுடன் தொடர்புடைய அறிக்கைகள் வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
“சினோபார்ம்” தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் கொரோனா வைரஸின் “டெல்டா” மாறுபாட்டிற்கு சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியை காண்பிக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.