கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சட்டம் மூலம் அடக்குமுறை தொடங்கப்படும் என்ற சமூக அச்சம் இருப்பதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் கட்டளை சட்டம் பிரித்தானிய ஆட்சியின் போது நம் நாட்டில் இயற்றப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், சுமார் 124 ஆண்டுகள் இது போன்ற தொற்றுநோய் பரவும் காலத்தில் அமுல் படுத்தப்பட்டு வந்தது என்றார்.
கொவிட் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, இந்த சட்டம் நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டது.இந்த சட்டங்கள் இந்த நாட்டில் தொற்று நோய் பரவுவதை குறைக்க போதுமானதாக இருந்தன.
இருப்பினும், அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின் எல்லைக்கு வெளியே இருக்கும் வெளிநாடுகளுக்கு பொருந்தக் கூடிய சட்டங்களை அமல்படுத்த சில முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம்.
எனினும் அதுபோன்ற ஒரு சட்டத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக நிறைவேற்ற இந்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொவிட் தொற்று நோயை அடக்குவதற்கான எல்லைக்கு வெளியே, இது தொடர்பாக ஒரு பெரிய சமூக பீதியைக் கொண்டுவர கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது என்றார்.