January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் டிஜிட்டல் கொவிட் தடுப்பூசி சான்றிதழ் அறிமுகம்!

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிக்கான டிஜிட்டல் சான்றிதழ் (ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்) சுகாதார அமைச்சில் இன்று (11) அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  நாமல் ராஜபக்‌ஷவின் பரிந்துரையின் கீழ்  இந்த தடுப்பூசி சன்றிதழ் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முதலாவது ஸ்மார்ட் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை இம் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி சார்பாக, இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபிலா ஜீவந்தாவுக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வழங்கி வைத்தார்.

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களும் விரைவில் சுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.