இரத்தினபுரி மாவட்டத்தின் பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் தெமடகொட பொலிஸ் பிரிவு, தலஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவு, தலஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவு ஆகியவற்றின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், குருநாகல் மாவட்டத்தின் கஹன்கம கொஸ்கல வத்த பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.