January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹஜ்ஜுப் பெருநாள் தினம் குறித்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பன அறிவித்துள்ளன.

இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை காணும் மாநாடு இன்று (10) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டின் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையின் எப்பகுதியிலும் தென்படாததன் காரணமாக, துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் (12)துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக கொள்ளப்படும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.