அரசாங்கத்தின் சேதன உர புரட்சியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சேதன உர புரட்சியைக் கைவிடுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் தயாராகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சேதன உர புரட்சியை தோற்கடிக்க சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.