இலங்கையின் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
உலகத்தின் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகும் போது, அதற்கான சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 3 மில்லியனுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்களிப்பு செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த வருமானத்துக்கு 4 பில்லியன் ரூபாய் வரையில் பங்களிப்பு செய்யும் சுற்றுலாத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கி, சுற்றுலாத்துறை நடவடிக்கைகளுக்கு தயார்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.