இலங்கையில் 4 மில்லியன் தென்னங்கன்றுகளை நாட்டும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
‘வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி இன்று சிலாபத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் வருடாந்த தேங்காய் விளைச்சலை 2800 மில்லியனில் இருந்து 3600 மில்லியன் காய்கள் வரை அதிகரிக்க உத்தேசிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் தேங்காய் சார்ந்த உற்பத்திகளுக்கு அதிக கேள்வியை ஏற்படுத்த முடியும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மில்லியன் தென்னங்கன்றுகளில் இரண்டு மில்லியன் கன்றுகள் மானிய அடிப்படையிலும், 1 மில்லியன் கன்றுகள் சமூர்த்தி பெறுநர்களுக்கும் 1 மில்லியன் பயிரிட விரும்புவோருக்கும் வழங்கவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.