எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) இடம்பெற்றது.
இதன்போது, அரசியல் கைதிகள் தொடர்பில் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலை செய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருப்பதோடு அவர்கள் விடுதலை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து 11 வருடங்களுக்கு பின்னர் பொது மன்னிப்பு கொடுத்து அவர்கள் வாழ்வதற்கான வழி விடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக பாராளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
காணாமல் போனோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோம்.
மேலும், வன்னி மாவட்டத்தில் பொருளாதார, அரசியல் சமூக பிரச்சினைகளை கட்சி ரீதியான பிரிவினைகளை பார்த்து, செய்தால் மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் போகும்.
குறிப்பாக வன்னியில் உள்ள குளங்களை திருத்த வேண்டும். கமத்தினூடாக எமது பொருளாதாரம், மற்றும் சமூகம், வளர்ச்சியடைய இலகுவான வழி அதுவே எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.