யாழ். மருதங்கேணியில் பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
செம்பினயன்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கே, இவ்வாறு இராணுவத்தினர் வீடொன்றை நிர்மாணித்து கையளித்துள்ளனர்.
யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பேரேராவின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் சரீர உழைப்பில் வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது.
55 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 553 ஆவது படைப் பிரிவுகளின் ஏற்பாட்டின் கீழ் 10 ஆவது வியஜபாகு படையணி இந்த திட்டத்தை அமுல்படுத்தி வருகிறது.