May 22, 2025 22:10:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்னஞ்சல்களை அழித்த குற்றச்சாட்டில் எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர்கள் கைது!

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கப்பலின் தலைமை மாலுமியுடன் மேற்கொண்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களை எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவர் நிலையம் அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் பரிமாற்ற மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் மேற்படி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பலின் உள்நாட்டு முகவர் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில், பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற்பரப்பில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தாக கருதப்படும் எகஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து, கடல்சார் சூழலை அதிகமாகப் பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.