
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக 12 ஆயிரம் மின் துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கேகாலை, புத்தளம், காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, தம்புள்ளை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின் தடை மற்றும் துண்டிப்புகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.