
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாரிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டதன் மூலம் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் சாத்தியமாகாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.