
இலங்கையின், மத்திய மலை நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று (10) அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் அதிகரித்ததால் மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் சென்கிளயர் நீர் வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப் பகுதியை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.