பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்ட படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே, ஐக்கிய தேசியக் கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் அயலவர் ஒருவரின் பிறந்ததின விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு எவ்வித இரகசிய கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
‘அவர்கள் அங்கு அமைச்சரவை மாற்றம் அல்லது அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களில் மாற்றம் குறித்து கலந்துரையாடவில்லை’ என்று ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.