July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மற்றும் பல இடங்களில் அதிக காற்று; பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, மற்றும் அதனையண்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (09) இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை (10) அதிக காற்று வீசியுள்ளது.

மத்திய மலை நாட்டில் சில நேரங்களில் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்  என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் முதல் பொத்துவில் வரையும் கொழும்பு மற்றும் ஹம்பாந் தோட்டை வழியாக ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் (60-70) கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,பல பகுதிகளில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவவுள்ளதால் பல மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் ரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.