November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை

கோதுமை மா விலையை அதிகரிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனம் ஒன்று ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால்  அதிகரித்துள்ளதால் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், அனுமதியின்றி கோதுமை மா விலையை அதிகரித்த குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மா விலை அதிகரிக்கப்படாது என உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து நாட்டில் பேக்கரி பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.