போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார்.
போராட்டங்களை முன்னெடுப்பது மக்களின் ஜனநாயக உரிமை எனினும் உலகளாவிய தொற்று நோயின் போது மக்கள் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளை பின்பற்றி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எவ்வாராயினும் போராட்டக்காரர்களுக்கு ஏதிராக பொலிஸார் நடந்து கொண்ட விதம் சரியானது அல்ல. நாம் எப்போதும் பிழையானதை சுட்டிக்காட்ட தயங்கியதில்லை என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் கட்டுப்பாடுகளை மீறி போராட்டங்களை முன்னெடுத்ததால் இறுதியாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இது போன்று பல சிக்கல்கள் உள்ளன என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.