January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை கண்டித்தும், நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினரால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியாவாறு பல்வேறு கோசங்களை எழுப்பி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உரிமைகளுக்காக போராடும் மக்களை தனிமைப்படுத்தல் சட்டத்தை காட்டி கைது செய்து வருவதாகவும், இதனை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய ஆர்ப்பாட்டங்களை நடத்த மக்களுக்கு உரிமை உள்ளதாகவும், அவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கோ, அதில் ஈடுபடுவர்களை கைது செய்வதற்கோ பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவ்வாறு கைது செய்வதானது அரசியலமைப்பை மீறும் செயற்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.