பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், அதனையொட்டி யாழ்ப்பாணத்தில் ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியின் ஆதரவாளர்கள் யாழ். நகரில் வெடி கொளுத்தியும், வீதியில் செல்வோருக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளரின் தம்பித்துரை ரஜீவின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வைக்கப்பட்டது.
கட்சியின் ஆதரவாளர்களும், கட்சியின் பிரதேச செயற்பாட்டாளர்களும் அதில் கலந்துகொண்டுள்ளனர்.