
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்தப் பரீட்சைகள் கொவிட் தொற்று நிலைமை காரணமாக ஒக்டோபர் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.