July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைதுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உயர்நீதிமன்றத்தில் மனு!

தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஹர்ஷ ராஜகருணா மற்றும் மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பயன்படுத்தி, அமைதியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கை மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி பொலிஸாரின் குறித்த நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறுவதாக அறிவிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.