July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியாக இருப்பதில் தவறென்ன?’

நாட்டின் ஜனாதிபதி ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும் பாதுகாப்பு அமைச்சர் ஒரு இராணுவ அதிகாரியாக இருப்பதிலும் என்ன தவறு உள்ளது?.ஜனாதிபதியினால் மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில், இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில் இராணுவமயம் என்ற பெயரை சூட்டி விமர்சிப்பதை கைவிட வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டினை பாதுகாத்து, கொவிட் நிலைமைகளை சரியாக கட்டுப்படுத்தும் இராணுவத்தை இன்று விமர்சிக்கின்றனர்.இன்று சவேந்திர சில்வாவை விமர்சிக்கும் நபர்கள் எவ்வாறு அன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுத்தீர்கள்.

மக்கள் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் வேளையில் இராணுவம் அதற்கு முன்னின்று செயற்படும் நிலையில்,இராணுவ மயம் என்ற பெயரை சூட்டி விமர்சிக்கிறனர்.நாடு முன்னேற புதிய கொள்கைத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.