May 29, 2025 19:43:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக மகிந்த ஹத்துருசிங்ஹ நியமனம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக அதன் பொது முகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான கமல் ரத்வத்தவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது முகாமையாளராக (சர்வதேச விவகாரங்கள்) டபிள்யூ.எம்.என். வான்சேகர நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.