
யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் மீள்குடியமர்த்தப்படாத குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரதேசங்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்னும் மீள் குடியேறாதவர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பான தகவல்களை இற்றைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
எனவே, இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமராத மக்கள் தாங்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர், குறிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.