
அரசாங்கத்தின் இரண்டு இராஜாங்க அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல், தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் கலந்துகொண்டுள்ளார்.