June 16, 2025 22:01:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 40 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஜுலை 7 ஆம் திகதி இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மரணித்தோரில் 11 பெண்களும் 29 ஆண்களும் அடங்குவதாகவும், இவர்களில் 28 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3391 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் 268,676 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 239,584 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.