January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் மகிந்தானந்த வெளிநாட்டு பயணத்தைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வெளிநாட்டு பயணத்தைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அமைச்சர் மகிந்தானந்த மீது தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை உயர் நீதிமன்றம் தடை செய்திருந்தது.

உலக உணவுத் திட்டத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள அமைச்சர் மகிந்தானந்த இத்தாலி செல்ல வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் சட்டத்தரணிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் மகிந்தானந்த இம்மாதம் 31 ஆம் திகதி வரை வெளிநாட்டு பயணத்தைத் தொடர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.