தீர்மானங்களை எடுக்கும் போது தந்தை ஒருவரைப் போன்று சில நேரங்களில் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டியேற்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று புதிய நிதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் பொறுப்பெடுத்துள்ள சவாலை மேற்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாம் கடினமான ஒரு விடயத்தைப் பொறுப்பேற்றுள்ளதாகவும், சவாலை ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம் என்றும் பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் தேவைகளே இந்த அரசாங்கத்தினதும் தனதும் முன்னுரிமையாக அமையும் என்றும் பிரச்சினை என்ன என்பது தொடர்பான புரிதல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் தந்தை ஒருவரைப் போன்று கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டி ஏற்பட்டாலும், அவை உண்மையாகவே பொதுமக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டதாக இருக்கும் என்று நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.