January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை’;பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில்  பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது பயங்கரவாதம் தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வகையில், சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளை குறிவைத்தே இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே, அமெரிக்காவினால் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு  செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் பயண எச்சரிக்கை கொரோனா வைரஸ் தொடர்பானது என்ற போதிலும் ஏற்கனவே காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.