
புதிதாக பதவியேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணத்தில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டுள்ளது.
கலாநிதி யோகராஜன் அறக்கட்டளை அமைப்பின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் இந்த வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூசை வழிபாடு நடத்தப்பட்டதுடன், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (08) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதேவேளை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.