July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 வயது சிறுமி விற்பனை; மற்றுமொரு இணையத்தள உரிமையாளர் கைது

கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த மேலும் ஒரு இணையத்தளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்ல பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு இணையத்தளங்கள் ஊடாக இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் இரண்டு இணையத்தளங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் மாலைதீவுகளின் முன்னாள் இராஜாங்க அமைச்சர், மிஹிந்தலை பிரதேச சபை உப தலைவர், பிரபல வர்த்தகர் ஒருவர், மதகுரு ஒருவர், கப்பல் கெப்டன் மற்றும் கெப்டனின் உதவியாளர் ஒருவர் மற்றும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.