
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் பயப்படுவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை வென்றெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.