இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதற்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கும் முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட நிபுணர்கள் அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.