இலங்கையில் பைசர் தடுப்பூசி வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல் டோஸாக அஸ்ட்ரா செனிகா பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவதாக பைஸர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இம்மாதம் மூன்றாம் வாரமளவில் இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி கிடைக்கப் பெறவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
குறித்த அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையில் பைசர் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இருந்தவர்களுக்கு இம்மாதம் மூன்றாம் வாரம் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.