February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸில் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பஸில் ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.

அதன்பின்னர் அவர் தனக்கென ஆளும் கட்சி பக்கத்தில் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள முன்னர் அவர் நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட, தனது பதவியை இராஜினாமா செய்தை தொடர்ந்து வெற்றிடமான ஆசனத்திற்கு பஸில் ராஜபக்‌ஷவின் பெயரை பரிந்துரைத்து அந்தக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.

இதன்படி அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியை வெளியிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.