பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் நிதி அமைச்சில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முற்பகல் அவர் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நிதி அமைச்சராக பதவி வகித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரித்துள்ளது.