January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீன நபருக்கு கடலட்டை பண்ணை செய்ய அனுமதி கொடுத்தது யார்?’

கிளிநொச்சி மாவட்ட கௌதாரிமுனை கடலோர பிரதேசத்தில் சீன பிரஜை ஒருவருக்கு கடலட்டை பண்ணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகர்,பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதி இல்லாது நேரடியாக சீன நபருக்கு கடலட்டை பண்ணை செய்ய அனுமதி கொடுத்தது யார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

எமது மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வாறு இருக்கையில் இந்த நாட்டு பிரஜை இல்லாத ஒருவருக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசாங்கம் செய்ய முயற்சிப்பது என்ன?

நாற்பது ஏக்கர் பரப்பில் இரண்டு காணிகளை இவ்வாறு கொடுத்துள்ளனர்.அதேபோல் யாழ்.கச்சேரியின் பழைய வளாகத்தில் சீன நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்டின் சட்டம் யாருக்காக பிரயோகிக்கப்படுகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.கிளிநொச்சியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்ல யாழ்.மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.