July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர் பூர்வீக பூமியை உருவாக்கும் அமெரிக்க காங்கிரஸின் யோசனையை விளையாட்டாக கருத வேண்டாம்’

வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீ க பூமியென ஏற்றுக் கொள்ள வேண்டுமென அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை ஒன்றினை கொண்டு வந்துள்ளனர்.இஸ்ரேல என்ற நாடும் இவ்வாறே உருவாகியது.1930 களில் பெல்பர் பிரபு கடிதம் ஒன்றை எழுதினார். யூதர்களுக்கு என்ற நாடொன்றை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.அடுத்த முப்பது ஆண்டுகளில் இஸ்ரேல் உருவாகியது. ஆகவே இது தான் ஆரம்பம்,இதனை விளையாட்டாக கருத வேண்டாம் என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் பிரதான இரண்டு சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றியுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றும், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றும் கொண்டுவரப்பட்டது.

இப்போது அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீ க பூமியென ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க காங்கிரஸில் பிரேரணை ஒன்றை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தில் எவருக்கும் தெரியாது.இஸ்ரேல் என்ற நாடும் இவ்வாறே உருவாகியது.1930 களில் பெல்பர் பிரபு என்பவர் கடிதம் ஒன்றை எழுதினார்.யூதர்களுக்கு என்று நாடொன்றை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.அடுத்த முப்பது ஆண்டுகளில் இஸ்ரேல் உருவாகியது. ஆகவே இது தான் ஆரம்பம்.இதனை விளையாட்டாக கருத வேண்டாம்.

சர்வதேச நாடுகள் எதிர்பார்க்கும் யோசனைகள் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை.ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை இலங்கையின் சுயாதீனத்தை பாதிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் கூறிய விடயங்களையே நாட்டு மக்களும் கேட்டு நிற்கின்றனர்.வெறுமனே கட்டிடங்களை கட்டி பிரயோசனம் இல்லை.மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே சர்வதேசமும் எமது மக்களும் கேட்டு நிற்கின்றனர்.

நாம் முன்னுதாரணமாக ஆட்சியை முன்னெடுத்துக் காட்டினோம். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இன்று அவ்வாறான நிலையொன்று உள்ளதா? இப்போது எங்கே சுயாதீனம் உள்ளது? பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.இது சுயாதீனத்தை பாதிக்காது.ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்ள அரசாங்கம் என்ன செய்துள்ளது? செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் அரசாங்கம் கூறப்போகும் பதில் என்ன? அரசாங்கமாக ஐக்கிய நாடுகள் முன்னிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையிலும் எதனைக் கூறப்போகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.