November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சீனாவுக்கு வழங்க தீர்மானமில்லை’

இலங்கையில் உள்ள எந்தவொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் சீனாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஹெஷா விதானகே, சமிந்த விஜயசிறி ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதற்காக இந்திய அரசாங்கத்துடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இப்போதும் 1.2 மில்லியன் மெற்றிக் தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலைகளை வேறு எவருக்கும் குத்தகைக்கு கொடுக்கவோ அல்லது தனியார் மயப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் எமக்கு இல்லை.

அதேபோல், வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சீனாவுக்கோ அல்லது வேறு எந்தவொரு நாடுகளுக்கோ வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

.