இலங்கையில் அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்புடன் நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.
வயது வித்தியாசமின்றி அரச பாடசாலைகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களை அடையாளம் காண அதிபர்களினால் உதவி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.