அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை அடுத்த வாரம் முதல் வழமை போன்று மீணடும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொரோனா தடுப்பூசி செலுத்துவது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், அரசாங்க நிறுவனங்களின் சேவைகளை அடுத்த வாரம் முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், கடந்த மே 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்படி, அரச நிறுவனங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மட்டுமே அழைக்க நிறுவன தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மறு அறிவித்தல் வரும் வரை இந்த சுற்றறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயலாளர் தெரிவித்தார்.