உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயா சமய, பகுதிநேர அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை என்று பொதுச் சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்படும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவொரு சவால் ஏற்பட்டாலும், மக்களுக்காக தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின் நிற்காது என்றும் தெரிவித்தார்.