கொரோனா வைரஸின் திரிபான ‘லெம்ப்டா’ வைரஸ் குறித்து இலங்கையின் சுகாதார தரப்பு விழிப்புடன் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் டெல்டா திரிபைவிட ஆபத்தான திரிபாக ‘லெம்ப்டா’ கருதப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
லெம்ப்டா வைரஸ் உலகின் 30 நாடுகளில் பரவி வருவதாகவும், இலங்கை அதுதொடர்பாக விழிப்புடன் இருப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லெம்ப்டா வைரஸ் முதன் முதலாக இலத்தின் அமெரிக்க நாடான பேருவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதாரத்துறை லெம்ப்டா வைரஸ் தொடர்பான தகவல்களைத் திரட்டி வருவதாக ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘டெல்டா’, ‘லெம்ப்டா’ உட்பட எல்லா கொரோனா திரிபுகளில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதற்கு பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.