முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உட்பட ஐவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 2 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மறு அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பொதுமக்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.