
இலங்கைக்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று அமெரிக்க இராஜாங்க செயலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டல்களிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
குறுகிய அறிவிப்பு அல்லது எவ்வித அறிவிப்பும் இன்றி இலங்கையில் தீவிரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பஸ் நிலையம், விமான நிலையம், சுற்றுலா பயணிகள் தங்கும் ஹோட்டல் போன்றன தீவிரவாத தாக்குதல் இலக்குகளாக இருக்கலாம் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் அபாயம் நிலவும் மூன்றாம் பிரிவின் அதிக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலிலும் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் இலங்கைக்கு பயணிப்பது கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கக் கூடும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது.