January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது.

விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜேதாஸ ராஜபக்ஸ கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.