May 23, 2025 16:53:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் ஒருதொகை ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

File Photo

ரஷ்யாவில் இருந்து மேலும் ஒருதொகை ‘ஸ்புட்னிக்-வி’ கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 50,000 டோஸ் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களாக 80,000 ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.