உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இலங்கை பயங்கரவாத விசாரணை பிரவினர் கைது செய்துள்ளனர்.
மாவனெல்ல – பெலிகம்மன பகுதியில் வைத்து மொஹமட் சலீம் மொஹமட் சப்ராஸ் என்ற 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணிய சந்தேகத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.